பச்சமலையில் 250 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு : மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

0 297
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 22 திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு இருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறியதை தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட கலெக்டர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஏராளமான போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.