அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் 3வது முறையாக ஓடும் ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது

0 388
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்வார்கள். இதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்களுக்கும் பிரசவ காலத்தில் செல்வது வழக்கம். இந்நிலையில் காரைப்பட்டியைச் சேர்ந்த சங்கீதா வயது 25 என்ற நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்கு சென்றுள்ளார்.

அவரை பணியில் இருந்த செவிலியர் பரிசோதனை செய்து விட்டு உடனே மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கருமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த கடுமையான பிரசவ வலி ஏற்படவே உடனே பெண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முருகேசன் சற்று ஆம்புலன்சை மெதுவாக இயக்கவே அவசர கால மருத்துவ நிபுணர் மணிமேகலை குழந்தையை தூக்கி வைத்துக் கொண்ட பின்னர் கர்ப்பிணியை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சி அல்லது மணப்பாறைக்கு நிறைமாத கர்ப்பிணிகளை அனுப்பி வைக்கும் நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. சுகப்பிரசவம் ஏற்படும் கர்ப்பிணியை கூட கண்டுகொள்ளாமல் உடனே அனுப்பி வைப்பதால் தான் இதுபோன்று ஆம்புலன்சில் பிரசவிக்கும் நிலை உள்ளது.

கடந்த சில தினங்களில் துவரங்குறிச்சியில் இருந்து மணப்பாறைக்கு 2 முறையும், திருச்சிக்கு ஒரு முறையும் அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சில நிமிங்களிலேயே ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு நிறைவாக சிகிச்சை கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.