பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழக தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 257
Stalin trichy visit

தமிழக தேசம் கட்சி சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பெருகிவரும் கள்ள சாராய விற்பனையையும் அதனை தொடர்ந்து வரும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்திட கோரியும் மேலும் தேர்தல் வாக்குறுதி படி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழர் தேசம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் மகுடீஸ்வரன் தலைமை தாங்கினார் மாநில செயலாளர் பரமசிவம் குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக தேசம் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.