சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

0 355
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின்பேரில் திருச்சி சரக டி.ஐ.ஜி.ராதிகா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனி, நியூ காட்டூர் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் கஞ்சா பதுக்கி வைத்து இருந்த ராம்ஜிநகர் மில்காலனியை சேர்ந்த மதன் என்கிற மதன்மித்ரன்(33) மற்றும் 3 ஆண்கள், 4 பெண்கள் என 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 4½ கிலோ கஞ்சா மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுபோன்ற சட்டவிரோத செய்கைகளான மணல் திருட்டு, லாட்டரி விற்பனை, சூதாட்டம் மற்றும் சில்லறை மதுவிற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.