குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

0 791
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2021- 22ம் ஆண்டிற்கான இளநிலை பி.ஏ,. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.எஸ்.சி,. கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணினி பயன்பாட்டியல், தகவல் தொழில் நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இணையவழியில் விண்ணப்பிக்காத மாணவ மாணவிகளுக்கு நேரில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அதேபோல் முதுநிலை தமிழ் ஆங்கிலம் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நேரில் நடைபெற்று வருகிறது. எனவே இணைய வழியில் விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் மாரியம்மாள் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.