முசிறி காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா
திருச்சி ஆக. 3 முசிறி காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா பெண்கள் புதுமண தம்பதியர் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபாடு
திருச்சி மாவட்டம் முசிறியில் பரிசல் துரை ரோடு அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் படித்துறையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொதுமணத் தம்பதியர் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தும் விவசாயம் செழிக்கவும் தங்கள் குடும்பத்தினர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும் காவிரித்தாயை வழிபாடு செய்தனர் பூஜையில் தேங்காய், பழம், அரிசி அனைத்து வகையான பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படையல் இட்டு வழிபாடு செய்தனர். மேலும் பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிறைந்து இருக்க தாலியை கழட்டி வைத்து வழிபாடு செய்து அணிந்து கொண்டனர் வயது முதிர்ந்த பெண்கள் இள வயது பெண்களுக்கும் புதுமண தம்பதியருக்கும் மஞ்சள் கயிறு அணிவித்து ஆசீர்வாதம் செய்தனர் நீர்நிலைகளில் முளைப்பாரி காதோ லை கருவமணி ஆகிய அவற்றை காவிரியில் வெட்டு வழிபாடு செய்தனர். புதுமணத் தம்பதியினர் தங்கள் கல்யாண மாலையை காவிரி ஆற்றில் விட்டு வழிபாடு செய்தனர். இம்முறை காவிரியில் வெள்ளம் வருவதால் காவிரியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஆடிப்பெருக்கு முன்னிட்டு பெண்கள் படையலிட்டு காவிரித்தாயை வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் வருவாய்த் துறையினர் நகராட்சி நிர்வாகம் ஆகியோர் சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் முசிறி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு காவிரித்தாயை வழிபாடு செய்தனர்