அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கல்

0 333
Stalin trichy visit

திருச்சி, ஆக. 5  திருச்சி மாநகரில் 2 லட்சம் அதிமுக புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகளை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கி துவக்கி வைத்தார்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று  நடைபெற்றது.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகள் மாநகரைச் சேர்ந்த 10 பகுதி செயலாளர்களிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்பி ரத்தினவேல், முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் KC.பரமசிவம்,  மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன்,
மாவட்ட அவைத்தலைவர் V.ஐயப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின்,
மாவட்ட துணைச் செயலாளர் R.வனிதா, முன்னாள் மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, பகுதி கழகச் செயலாளர்கள் MA.அன்பழகன், D.சுரேஷ் குப்தா, LKR.ரோஜர், வெல்லமண்டி C.சண்முகம், ஏர்போர்ட் விஜி, MRR.முஸ்தபா, NS.பூபதி, நாகநாதர் A.பாண்டி, V.கலைவாணன், R.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலக்கரை R.சதர், மல்லிகா செல்வராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்
TAS.கலிலுல் ரகுமான், M.ராஜேந்திரன், நசீமா பாரிக், R.வெங்கட் பிரபு, அப்பாஸ், N.பாலாஜி மாநில பீடி பிரிவு செயலாளர் E.சகாப்தின் மற்றும் கழக நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.