பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

0 15
Stalin trichy visit

திருச்சி, செப். 4  மண்ணச்சநல்லூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த ராசாம்பாளையம் அருகே உள்ள சாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு வினோசாட்சி (வயது 14) என்ற மகளும், ஒரு மகனும் உண்டு. பெரியண்ணன், அல்வா கடை வைத்து நடத்தி வருகிறார்.

வினோசாட்சி தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் இயங்கி வரும் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்தவுடன் வழக்கம் போல் பள்ளி வேனில் வீட்டிற்கு வந்தார்.

இதற்கிடையே வனிதா விற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தனது கணவருடன் காலையிலேயே திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த வினோசாட்சி, திடீரென வீட்டின் மாடிக்கு சென்று மேற்கூரை பகுதியில் தனது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.

இதையறிந்த உறவினர்கள், அவரை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வினோசாட்சி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் வினோசாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இங்கு வழக்குப்பதிவு செய்த போலீசார், வினோசாட்சி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.