ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொதுமக்கள் அவதி
திருச்சி, செப். 4 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் பகுதியில் உள்ள கோட்டப்பாளையம், விஷாம்பாள் சமுத்திரம் தெற்கு, வடக்கு, பி.மேட்டூர், பாலிகிிருஷ்ணம்பட்டி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் மணிக்கணக்கில் காத்திருந்து பொருட்களை வாங்கும் சூழ்நிலை உள்ளதால், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ரேஷன் கடைகளில் பயன்படுத்தும் கணினி பயன்பாடுகளில் சர்வர் இணைப்பு கோளாறு காரணமாக, விநியோகம் தடைபடுவதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சர்வர் கோளாறு ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.