ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை

0 13
Stalin trichy visit

திருச்சி, செப். 4  திருச்சி மாவட்டம், முசிறி கார்காத்தார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 33). இவர் சொந்தமாக பயணிகள் ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி ரெங்கநாயகி (29) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ரெங்கநாயகி தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

கிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. மேலும் ஆட்டோவிற்கு வாங்கிய கடனை கட்டாததால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடன் பிரச்சனையால் மனமுடைந்த கிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் திருச்சிகொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 56). இவர் மாநகராட்சி 65-வது வார்டில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியின்போது இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பின்னர் அவர் 15 நாட்கள் விடுப்பு எடுத்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உலகநாதன் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின்பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.