இருசக்கர வாகனம் பறிமுதல் : இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

0 360
Stalin trichy visit

திருச்சி ஆக5 – திருச்சி செந்தண்ணீர்புரம் 4வது பாரி தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 20)இவர் விராலிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கோகுலகிருஷ்ணன் புதிதாக பைனான்ஸ் மூலம் இருசக்கர வாகனம் கடனுக்கு வாங்கி இருந்தார். இதையடுத்து வட்டி செலுத்தி வந்த கோகுலகிருஷ்ணன் திடீரென்று வட்டி பணத்தை செலுத்தவில்லை. இதனால் பைனான்ஸ் கொடுத்த தனியார் நிறுவனம் இருசக்கர வாகனத்தை மீட்டு சென்றுவிட்டனர். இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட கோகுலகிருஷ்ணன் கடந்த 29ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது சேலையில் தூக்கு மாட்டி தொங்கினார்.சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த பெற்றோர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்ததூக்கில் தொங்கிய கோகுலகிருஷ்ணனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோகுல கிருஷ்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.