முன் விரோதத்தால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

0 406
Stalin trichy visit

சமயபுரம் அருகே உள்ள சிறு மருதூர் மேல தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி என்பவர் மகன் அருண் (30). இவருக்கும் அதே பகுதி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் மகன் பாஸ்கர் (42) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி பாஸ்கர் கருக்கரிவாளால் அருண் கழுத்தில் வெட்டியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 தையல் போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் அருண் தாக்கியதில் பாஸ்கர் காயமடைந்ததில் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமான புகாரை தொடர்ந்து சமயபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.