திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலியாக உள்ள வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் (வார்டு எண்-6) கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் வையம்பட்டி ஒன்றியம் இனாம்ரெட்டியப்பட்டியில் நடைப்பெற்றது.

ஒன்றிய செயலாளர்கள் வையம்பட்டி (தெற்கு) N.சேது, வையம்பட்டி (வடக்கு) PVK.C.பழனிச்சாமி, மணப்பாறை (தெற்கு) MP.வெங்கடாசலம், மணப்பாறை (வடக்கு) மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் M.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.