மாயமான கூலித்தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு
திருச்சி, ஆக.5 மணப்பாறை அருகே மாயமான கூலித்தொழிலாளி மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மிதந்ததால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள குமரப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 45). திருமணமாகாத இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை முதல் மாயமான இவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் இவர் நேற்று அதே பகுதியில் உள்ள செல்வம் என்பவருக்கு சொந்தமான 40அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீரில் சடலமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து நல்லுச்சாமியின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மாயமானவர் மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.