இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு

0 328
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆமணக்கம்பட்டியை சேர்ந்தவர் பொன்னன் என்பவருக்கு சொந்தமான 65அடி ஆழமுள்ள கிணற்றில் தற்போது 40 அடி தண்ணீர் உள்ளது. அந்த கிணற்றில் துர்நாற்றம் வீசுவதையறிந்து உள்ளே பார்த்தபோது கிணற்றினுள் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். போலீசார் மணப்பாறை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டனர். போலீசார் விசாரணையில் இறந்தவர் கோரைப்பட்டியை சேர்ந்த ராமராஜ் (வயது 44) என்பது தெரியவந்தது. இவர் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் காணவில்லை என்பதும் மது போதையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த கிணற்றில்இருசக்கர வாகனத்துடன் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் எனவும் தெரிந்தது.

போலீசார் சடத்தை உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது போதையில் கிணற்றினுள் இருசக்கர வாகனத்துடன் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.