ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளில் 2 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
திருச்சி ஆக. 5 இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 27.80 இலட்சத்தில் சிறுதையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்களை நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தனிஷ்கா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ,வட்டார கல்வி அலுவலர் தலைமை ஆசிரியை உடன் சுகுணா ராஜ்குமார் ராஜேந்திரன் முருகன் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.