திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

0 296
Stalin trichy visit

திருச்சி, ஆக.5 திருச்சி மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (05.08.2024)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆணையர் வே.சரவணன் , நகரப் பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத்தலைவர்கள் த.துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன் , செயற்பொறியார்கள்,உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.