திருச்சி அருகே 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து – 5 பேர் காயம்!

0 474
Stalin trichy visit

சென்னையிலிருந்து மதுரைக்கு நேற்று ஆம்னி சொகுசு பேருந்து 26 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை லஞ்சமேடு கைகாட்டி அருகே வந்த போது சாலையின் குறுக்கே ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து அப்போது அருகில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

தகவலறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பயணம் செய்த பெங்களூரில் பணிபுரியும் மயக்கவியல் மருத்துவர் அகமது, சென்னை பல் மருத்துவ கல்லூரி மாணவி பிரமிதா, சென்னை சேத்துப்பட்டு மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்ட 5 பயணிகள் காயம் அடைந்தனர். இவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.