திருச்சியில் மகன் மகளுடன் தந்தை மாயம்; போலீசார் விசாரணை
திருச்சி திருவானைக்கோவில் பேங் காலனி பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்துள்ளார் இதனால் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் வைத்தியநாதனுக்கும் அவரது உறவினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று மகன் தாயுமான சர்மா(20), மகள் சுபிக்ஷா(17) ஆகியோர் உடன் வீட்டை விட்டு வெளியே சென்ற வைத்தியநாதன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வைத்தியநாதன் தம்பி முரளிகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் போலீசார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வருகின்றனர்.