உபரி நீர் திறப்பு : கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

0 1,225
Stalin trichy visit

திருச்சி, ஆக.13 காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து 35,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் நாளை 14.08.2024 காலை 6.00 மணி முதல் 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தினை பொருத்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதனால் கொள்ளிட கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ துணிதுவைக்கவோ கால்நடைகளை ஓட்டிச்செல்லவோ வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.