கதவை தாழ்பாள் போடாமல் தூங்கியதால் சம்பவம்; கிரேன் ஆபரேட்டர் வீட்டில் 9 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை

0 362
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நகர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மகன் சசிகுமார்(32). இவர் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சசிகுமார் வீட்டில் சசிகுமாரின் மனைவி நந்தினி, தாய் ஈஸ்வரி ஆகிய 3 பேரும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சசிகுமார் மணப்பாறை பகுதியில் கிரேன் இயக்குவதற்காக வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து சசிக்குமார் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்திருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சசிக்குமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் நந்தினியும், ஈஸ்வரியும் தூங்கிக்கொண்டு இருந்தனர். வீட்டில் பீரோ திறந்து கிடந்துள்ளது. வீட்டின் உள்பக்கம் தாழ்பாள் போடாமல் படுத்திருந்த நிலையில் மர்மநபர்கள் வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சசிகுமார் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.