தி.மு.க. சார்பில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ள தீர்மானம்

0 614
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி கூட்டம் தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்து மற்றும் நமது மாவட்ட செயலாளர் அமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டு இளைஞரணி சார்பாக வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம். இளைஞர் அணியின் உறுப்பினர் சேர்த்தல் மற்றும் இளைஞரணி புகைப்படம் ஒட்டிய படிவம் வழங்குதல்.


மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்த சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், தேசிங்குராஜன், ரவீந்திரன், சக்திபிரகாஷ், விஷ்ணுவரதன், ஒன்றிய நகர பகுதி பேரூர் அணி அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.