அமெச்சூர் கபடி கழக தலைமை புரவலராக  அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு

0 463
Stalin trichy visit

திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழக பொதுக்குழு கூட்டம் பாலக்கரையில் நடந்தது. கூட்டத்தில் தலைமை புரவலராக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தலைவராக தங்க.நீலகண்டன், செயலாளராக வெங்கடசுப்பு, பொருளாளராக முருகேசன், பெருந் தலைவராக சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டனர். கூட்டத்தில் நிர்வாகிகள் கயிலை கோபிகிருஷ்ணன், ராஜா, சேதுராமன் மற்றும் தேசிய கபடி வீராங்கனை சிவகாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது என்றும், கபடி வளர்ச்சிக்காக மாவட்ட அணிகளின் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு மாநில போட்டிக்கு வீரர்- வீராங்கனைகளை தேர்வு செய்வது என்றும், கபடி வீரர்- வீராங்கனைகளுக்கு தகுதிக்கேற்ப அரசின் அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், அதற்கான விண்ணப்ப மனுவை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் வழங்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.