தங்கும் விடுதியில் செல்போன் திருடியவர் கைது

0 196
Stalin trichy visit

திருச்சி செப் 20 –  திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 1வது தெருவில் தனியார் ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது இந்த விடுதியில் கடலூர் மாவட்டம் ஆலம்பாக்கம் சிந்தாமணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (வயது 29)என்பவர் தங்கி உள்ளார். இவர் நேற்று விடியற்காலை 2 மணி அளவில் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது இந்த விடுதியில் ஒரு மர்ம ஆசாமி உள்ளே புகுந்தான். பிறகு இவரது அறையில் வைத்திருந்த செல்போன் மற்றும் அங்கு தங்கியிருந்த மேலும் 14 பேரின் செல்போனை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து ராஜேஷ் கண்ணா தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி புத்தூர் ஆப்பக்கார தெருவை சேர்ந்த ராஜா மாணிக்கம் மகன் மனோஜ் குமார் (வயது 19) என்பது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் உடனடியாக அந்த வாலிபர்ரை கைது செய்து அவர் திருடிய செல்போன்களை பறிமுதல் செய்தனர். பிறகுமனோஜ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.