சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றம்
திருச்சி, அக். 14 மழைக்காலம் தொடங்கியதும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது அதன்படி நேற்று (அக்.13) விடியற்காலை திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது
இந்த கனமழையால் திருச்சி கே கே நகர் பகுதி சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 60வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய்க்கு தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் விரைந்து வந்த கவுன்சிலர் காஜாமலை விஜய் உடனடியாக ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து குளம் போல் தேங்கிய மழை நீரை வடிவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார் மேலும் அப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் உள்ள குப்பை கழிவுகளை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தார்.மேலும் சம்பவ இடத்திற்கு விடை வந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக மழை நீர் வடிவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.