லால்குடி அரசு பள்ளி மைதானத்தில் மழைநீருடன் கழிவு நீர் தேக்கம்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 390
Stalin trichy visit

திருச்சி, அக். 14  லால்குடி அரசு பள்ளி மைதானத்தில் முழங்கால் அளவு மழைநீருடன் சேர்ந்த கழிவு நீர் தேங்கி இருக்கும் அவலம் – பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் .

திருச்சி மாவட்டம் லால்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மைதானத்தின் அருகில் கழிவுநீர் கால்வாய் ஒன்று செல்கிறது. இந்த கழிவு நீர் கால்வாயில் இருந்து நீர் வழிந்து அரசு பள்ளி மைதானத்திற்குள் புகுந்து முழங்கால் அளவிற்கு தண்ணீரும், கழிவு நீரும் நிரம்பி உள்ளது.

இதனால் அரசு பள்ளியைச் சுற்றி இருக்கும் பாரதி நகர் ,ஜே ஜே நகர் ,கணபதி நகர் ,சக்தி நகர் ஆகிய குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்திற்கு அழகியுள்ளனர்.

மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து தேங்கி இருப்பதால் கொசு உற்பத்தி அதிகமாகியுள்ளது. மற்றும் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்கள் அடிக்கடி வீட்டிற்குள் வந்து விடுகிறது.

இது குறித்து நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும்
மேலும் இந்த அரசு பள்ளி அருகிலேயே காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு  அலுவலகம் உள்ளது. பள்ளி மாணவர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இப்பகுதியில் இங்கு தேங்கி இருக்கும் கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் முதல்வர் தனிப்பிரிவு என இது தொடர்பான துறைகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும், அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு

 

Leave A Reply

Your email address will not be published.