மழையால் இடிந்த வீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் நிதியுதவி
திருச்சி, அக். 14 திருவெறும்பூர் தொகுதியில் மழையின் காரணமாக இடிந்த வீட்டை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு நிதியுதவி வழங்கினார்.
திருச்சி, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார் கோட்டை கணேஷ் நகர், எண் 32
45 ஏ வட்டத்தில் , அன்பழகி w/o லேட் ராஜு, அமைந்துள்ள வீடு மழையின் காரணமாக இடிந்தது அந்த வீட்டை பார்வையிட்டு நிதியுதவி வழங்கி வீட்டை மறு கட்டமைப்பு செய்வதற்கு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மழையின் காரணமாக இடிந்த வீட்டை பார்வையிட்டு நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ் உடன் இருந்தனர்