வடகிழக்கு பருவழை குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு
திருச்சி, அக். 15 திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவழையை எதிர் கொள்வது குறித்து லால்குடி தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆணையின்படி லால்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் லால்குடி கோட்டாச்சியர் சிவசுப்ரமணியன் தலைமையில் வட்டாட்சியர் முன்னிலையில் வடகிழக்கு பருவழையை எதிர் கொள்வது குறித்து லால்குடி தீயணைப்பு துறையினர் மொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.இதில் பேரிடர் காலத்தில் ஆபத்தில் சிக்கி உள்ள நபர்களை எவ்வாறு மீட்பது அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கொடுப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து காட்டினார்.
இந்நிகழ்வில் சிறப்பு நிலைய அலுவலர்கள் பிரபு மற்றும் இளங்கோவன் வீரர்கள்.
அசோக், விஜய் அமிர்தராஜ், அருண்பாண்டியன், அஜித்குமார் மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.