அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி
திருச்சி, அக். 15 திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கொணலை புனித தெரசாள் உயர்நிலைப் பள்ளியில் 2014 ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் அருகேயுள்ள கொணலை கிராமத்தில் உள்ள புனித தெரசாள் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2014-2017 ம் ஆண்டு 10-ம் வகுப்பில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். அதன் பின்னர் மேற்படிப்பிற்காக சிலர் மற்ற பள்ளிகளுக்கும், மற்றவர்கள் வெளி மாவட்டங்களுக்கும் சென்று விட்டனர். தற்போது அப்பள்ளியில் படித்தவர்கள் பலரும் அரசு பணிகளில் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாட்டிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கொணலை கிராமத்தில் உள்ள 2014 ம் ஆண்டு மாணவர்களில் ஒருவர் அனைவரிடமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு வரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் ஒருவர் கூறுகையில்:-
நாம் படித்து காலங்களில் ஆசிரியருக்கும் பெற்றோர்களுக்கும் பயந்து படித்து வந்தால் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். மேலும் காடு மேடு பகுதிகளில் விளையாடி திரிந்து உடலை ஆரோக்கியமாக இருக்கிறோம்.
ஆனால் தற்போது உள்ள நமது குழந்தைகள் அதிகமாக செல் போன் பயன்படுத்தி வருகின்றனர் இதனால் அவர் மூளை திறன் மழுங்கி உடல் ஆரோக்கியத்தை கெடுக்கிறது.
கடந்த 10 ஆண்டுகள் முன்பு நாம் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தால் நமது பெற்றோர்கள் வீட்டிற்கு போய் படி என கண்டிப்பார்கள்.
இப்போது உள்ள பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் போய் விளையாடு என்று சொன்னாலும் அவர்கள் வெளியில் சென்று மொபைல் போனை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர் இதனால் இளைய சமுதாயத்தின் மீது நாம் அக்கறை காட்ட வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த பள்ளியின் தாளாளர் மரியதாஸ் , தலைமை ஆசிரியர் ராணி , ஆசிரியர் சார்லஸ் , மற்றும் மற்ற ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து ஆசி பெற்றனர்.