அதிமுகவினர் வெடித்த பட்டாசால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு பார்வையிழப்பு

0 144
Stalin trichy visit

திருச்சி, அக். 17  திருவெறும்பூரில் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் மற்றும் கட்சி அமைப்புச் செயலாளர் மனோகரன் ஆகியோரை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட வெடியில் பாதுகாப்பு பணியில் இருந்த திருவெறும் யூர் சிறப்பு சப் இன்ஸ்பெட்டர் வலது கண்ணில் பட்டதில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் வரும் 2026 வது ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒன்றிய, பகுதி, நகர அளவில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக் தலைமையில் திருவெறும்பூர் கூத்தைப் பார் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் அதிமுக அமைப்புச் செயலாளர் மனோகர் திருவெறும்பூர் கூத்தைப் பார் பிரிவு சாலை அருகே கட் அவுட் பிளக்ஸ் பேனர்களும் கொடி கம்பங்களும் நட்டு இருந்ததோடு வெடி வைத்தனர்.அப்படி அவர்கள் வைத்த வெடி அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருவெறும்பூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனின் வலது கண்ணில் பட்டது இதில் காயமடைந்த சுப்பிரமணியனை பக்கத்தில் இருந்தவர்கள் திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்குசுப்பிரமணியனின் கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் சுப்பிரமணியன் கண்ணை காப்பாற்ற முடியாது என்றும் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதுவும் உறுதியாக சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளனர்.

இந்த தகவல் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக்கு கிடைத்ததும் உடனடியாக சுப்பிரமணியனுக்கு உயர் சிகிச்சை அளிக்க மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.