சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் கவனத்திற்கு
திருச்சி, அக். 17 திருவெறும்பூர் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இரவு நேரங்களில் மாடுகள் சாலை ஓரங்களில் சுற்றி தெரிவதால் மனிதர்களின் இறப்புகள் அதிகமாக நடைபெறுகிறது. இது காவல்துறைக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்துகிறது, இரவு நேரங்களில் திருடர்களை கண்காணிக்க வேண்டிய வேலையில், தற்பொழுது சாலைகளில் மாடுகளை கண்காணிக்க வேண்டிய நிலைமை காவல்துறைக்கு இருந்து வருகிறது .
எனவே மாடுகளின் உரிமையாளர்கள் தயவு கூர்ந்து மாடுகளை, மாடு பட்டியில் அடைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.