ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் சிலம்ப பயிற்சி பட்டறை – 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வி துறை சார்பாக 2 நாள் சிலம்ப பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிலம்ப கழக செயலாளர் M.ஜெயக்குமார், சிலம்ப கோர்வை இந்தியா தலைவர் திருச்சி, R. மோகன் ஆகியோர் சிலம்ப பயிற்சி அளித்தனர்.

இதில் கல்லூரி மாணவ மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டுப் பயிற்சி பெற்றனர். இதனை கல்லூரி செயலர் அம்மங்கி V. பாலாஜி, ஆலோசகர் N.ராமானுஜம், இயக்குனர் S.ஸ்ரீவித்யா, முதல்வர் J.ராதிகா, துணை முதல்வர் M.பிச்சைமணி, மற்றும் துறைத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதை உடற்கல்வித் துறை ஆசிரியர்கள் M.கருப்பையா மற்றும் G.பிருந்தா ஆகியோர் சிறப்புடன் ஏற்பாடு செய்தனர்.