திருச்சி ஊரகப்பகுதிகளில் நீர் வழித் தடங்களை சீர் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

0 351
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் வருகின்ற வடகிழக்கு பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள சாக்கடை, வடிகால் வாய்க்கால்கள், கழிவு நீர் தேங்காமல் செல்லும் வகையில் சுத்தம் செய்யவும், சிறு பாலங்கள், குழாய்கள், மழைநீர் தேங்காமல் செல்லும் வகையில் அடைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்திட வேண்டும் எனவும், மேலும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஊரணிகளில் மழைநீர் தேங்கும் வகையில் அடைப்புகள் இருப்பின் அதனை அவ்வப்போது சுத்தம் செய்திடவும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான நீர் நிலைகளிலும் உள்ள உள் மற்றும் வெளிப்புற வழித்தடங்களில் மழை நீர் அடைப்புகள் இருப்பின் அதனை சுத்தம் செய்திடும் வகையில் நீர்வழி தடங்களை சீர்செய்யும் வாரமாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அரசின் உத்தரவின்படி நீர் வழித்தடங்களை சீர்செய்யும் பணி செயல்படுத்தப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.