ராமஜெயம் 60வது பிறந்தநாள் – திருச்சி கேர் கல்லூரியில் அமைச்சர் கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை!

0 394
Stalin trichy visit

திமுக கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு அவர்களின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயம் அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரியில் உள்ள திருஉருவ சிலைக்கு அமைச்சர் கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், இனிகோ இருதயராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம்,விஜய ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி, கண்ணன், இளங்கோ, மோகன்தாஸ், ராம்குமார்,ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல் உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி உறையூர், தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் தொழில் அதிபர் கே.என்.ராமஜெயம் பிறந்தநாளை முன்னிட்டு ஏழைஎளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.