காவிரியில் மூழ்கிய வாலிபர் – 2வது நாளாக தேடும் பணி தீவிரம்!

0 700
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை வரகனேரி ஆனந்தபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் நாகமாணிக்கம். இவரது மகன் ஸ்ரீராம். இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். பின்னர், அன்று மாலை நண்பர்களுடன் ஓயாமாரி தில்லைநாயகம் படித்து காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஸ்ரீராம் நீரில் மூழ்கி உள்ளார்.

தகவலறிந்த கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு வரையும் தேடியும் கிடைக்காததால் இன்றும் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து நாகமாணிக்கம் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.