திருச்சி ஐஜி அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி

0 324
Stalin trichy visit

 

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜி (71). இவருக்கு சொந்தமான 88 செண்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், திருச்சி மத்திய மண்டல காவல் துறை அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.