ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனுக்களில் 72 மனுக்கள் ஏற்பு

0 274
Stalin trichy visit

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தல் மற்றும் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதி பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் வையம்பட்டி ஒன்றியத்தில் 6-வது வார்டு, மருங்காபுரி ஒன்றியத்தில் 10-வது வார்டு, துறையூர் ஒன்றியத்தில் 13-வது வார்டு ஆகிய 3 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி, லால்குடி ஒன்றியம் சிறுமருதூர் ஊராட்சி, புள்ளம்பாடி ஒன்றியம் கீழரசூர் ஊராட்சி ஆகிய 2 ஊராட்சி தலைவர் பதவி, பல்வேறு யூனியன்களில் 19 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி என மொத்தம் 24 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 9-ந் தேதி நடக்கிறது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் 3 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 27 பேரும், 2 ஊராட்சி தலைவர் பதவிக்கு 8 பேரும், 19 வார்டு உறுப்பினர் பதவிக்கு 39 பேரும் என மொத்தம் 74 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் வையம்பட்டி ஒன்றியத்தில் 6-வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தாக்கல் செய்த ஒருவருடைய மனுவும், துறையூர் ஒன்றியத்தில் 13-வது வார்டில் தாக்கல் செய்த ஒருவருடைய மனுவும் என 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 72 மனுக்கள் ஏற்கப்பட்டன. நாளை(சனிக்கிழமை) மனுக்களை வாபஸ்பெறலாம்.

Leave A Reply

Your email address will not be published.