திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பார்சல் அனுப்ப வந்தவர் கைது

0 442
Stalin trichy visit

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அந்த வகையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களோடு பார்சல் மூலம் போதைப் பொருள்கள் அனுப்பப்பட உள்ளதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு பார்சல் அனுப்ப வந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் 10 கிலோ எடை கொண்ட கவர் ஒன்றை பார்சல் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப வந்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது அதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட போதைப்பொருள்கள் வெளிநாட்டுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர் திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பதும் தெரியவந்தது. இவரை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடக்கப்பட்டதாக தெரிகிறது. திருச்சி மாநிலத்தில் தங்கம் கடத்தல் அதிகரிப்பு தொடர்ந்து, போதைப் பொருட்கள் கடத்தப்படுவது சுங்கத்துறை அதிகாரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.