மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

0 276
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(27). இவர் சம்பவத்தன்று பாலக்கரையில் உள்ள ஓட்டல் முன் நிறுத்தி இருந்த அவருடைய மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முகமதுதமீம்(34), சுலைமான்(32) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.