விவசாயிகள் நெல், பருத்தி, மற்றும் மக்காச்சோள பயிர்களுக்கு பயிர் காப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்!
திருச்சி மாவட்டத்தில் நடப்பாண்டு ரவி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசு ஆணை தரப்பட்டுள்ளது. அதன்படி எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கவும் நிலையான வருமானம் கிடைக்க செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெறச் செய்யவும் திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல் அளவில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்யலாம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம். பயிர் காப்பீடு செய்ய முன்மொழி படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல் ஆகிய ஆவணங்களுடன் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம்.
இப்படத்தில் நெல் பயிருக்கு ஒரு ஏக்கர் பிரீமியமாக 557 மற்றும் பருத்தி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக 581 செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 15 ஆம் தேதி கடைசி நாளாகும். மக்காச்சோளம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக 373 ரூபாய் செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். இத்தகவலை அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அறிவிக்கப்பட்ட இறுதி நாட்களுக்கு முன்பாக வெள்ளம் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்று இறுதி நாளாகும். எனவே விவசாயிகள் அனைவரும் நடப்பு ஆண்டின் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக நெல் மக்காச்சோளம் பருத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.