தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நிர்மலாவை தலை துண்டித்து கொலை செய்த கொலையாளிகள் – திருச்சி கோர்ட்டில் சரண்!
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவராக இருந்த பசுபதிபாண்டியன் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் அவரது வீட்டில் இருந்த போது கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார், புறா மாடசாமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துப்பாண்டி ,நிர்மலா உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது ,இந்த நிலையில் புறா மாடசாமி, முத்துப்பாண்டி உள்ளிட்ட 4 பேர் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட இடங்களில் வெவ்வேறு சம்பவங்களில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு நந்தவனப்பட்டி பசுபதி பாண்டியன் வசித்த பகுதியில் வீடு வாடகைக்கு பிடித்து கொடுத்து உதவியதாக நந்தவனப்பட்டி நிர்மலா ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கு விசாரணையானது திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் நிர்மலாவை நேற்று முன்தினம் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ஈபி காலனி ரோடு பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு பணிகளை பிரித்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் நிர்மலாவை பயங்கர ஆயுதங்கள் கொண்டு வெட்டி கொலை செய்து தலையை மட்டும் துண்டித்து சென்றனர்.பின்னர் கொலையாளிகள் வெட்டப்பட்ட தலையை பசுபதிபாண்டியன் நந்தவனப்பட்டி யில் கொலை செய்யப்பட்ட அவரது வீட்டில் அவரது பிளக்ஸ் பேனர் அருகே வைத்து விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் கொலை செய்த கொலையாளிகள் அலெக்ஸ் பாண்டியன், சங்கிலி முத்து, ரமேஷ்குமார்,தமிழ்ச்செல்வம்,முத்துமணி ஆகிய 5 பேர் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் -4 ல் சரணடைந்தனர்.
இதனை விசாரித்த குற்றவியல் நீதிபதி குமார் இவர்கள் 5 பேருக்கும் 4 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முசிறி கிளைச் சிறையில் அடைத்தனர்.