Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது;-
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் வார்டு எண் 8க்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் ஓயாமரி எரிவாயு தகனக்கூடத்தினை நவீனபடுத்தவும், மராமத்து பணிகள் மேற்கொள்ளவும் இருப்பதால் 01.10.2021 முதல் 20.10.2021 வரை (20 இருபது நாட்கள்) தகனக்கூடம் இயங்காது எனவும், மாற்று ஏற்பாடாக வார்டு எண்.57ல் உள்ள உறையூர் கோணக்கரை தகனக் கூடம் மற்றும் வார்டு எண்.4ல் உள்ள ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் தகனக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.