திருவானைக்காவல் அருகே முதியவரிடம் 15 பவுன் நகை பறிப்பு

0 446
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவானைகோவில் நெல்சன் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மகாதேவன்(82). இவர் நேற்று அருகிலுள்ள மளிகை கடைக்கு காய்கறிகள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் மகாதேவன் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மகாதேவன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.