சிமெண்ட் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

0 239
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 26  திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் அரியலூரில் இருந்து கேரளா செல்லும் டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி திடீரென சாலையின் குறுக்கே சென்று சாலை ஓரம் கவிழ்ந்தது.

இதில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தமிழ் வடிவு என்ற பெண்ணின் கால் சிக்கி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய தமிழ் வடிவு உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் டேங்கர் லாரியை ஓட்டி வந்த விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் குமார் என்பவர் தப்பி ஓடிவிட்டார். இது பற்றி துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்து நடந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.