இருசக்கர வாகனங்களில் சாசகத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : எஸ்.பி. எச்சரிக்கை
திருச்சி, மார்ச் 26 தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் – வீடியோ வைரலான நிலையில் இளைஞர்களை கைது செய்து வாகனங்கள் பறிமுதல் – ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி செல்வ நாகரத்தினம் எச்சரிக்கை
இன்றைய காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருவது அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் தொடர்ந்து ரீல்ஸ் மோகத்தால் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வது நடந்துகொண்டு தான் இருக்கிறது.
திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட்லிருந்து சென்னை நோக்கி உயர்ரக இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி செல்லும்போது காரில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் ஒருவர் காரை ஓட்டி சென்றும் மற்றொரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சென்ற இளைஞரை வீடியோ எடுத்தும் வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். .இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டார்.
இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் சமயபுரம் பகுதி என்பதால் மாவட்ட கண்காணிப்பாளர் சமயபுரம் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திக் பாலமுருகன் ஆகியோர் சமயபுரம் சுங்கச்சாவடியில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து போது அந்த இளைஞர்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே உள்ள எஸ் ஆர் எம் யு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த மாணவர்களை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அழைத்துச் சென்றனர், மேலும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்தனர். சாகசத்தில் ஈடுபடுத்திய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அந்த இளைஞர்களின் பெற்றோர்களை அழைத்து இதுபோன்று இனிமேல் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்று இனிமேல் யாரும் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஒட்டி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எந்த ஒரு இளைஞர்களும் இதுபோன்று சாகசத்தில் ஈடுபடக்கூடாது என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்தார்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் ஓட்டி சென் லும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது இதுபோன்று யாரும் ஈடுபடக் கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.