காந்திமார்க்கெட் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

0 210
Stalin trichy visit

திருச்சி, மார்ச்.27 அரியலுார் மாவட்டம், செந்துரை, கீழ தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 33). திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே உள்ள காய்கறி கடையில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். சக ஊழியரான உமருடன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது வேலைக்கு இடையூராக லோடு வண்டி கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்தது. இது குறித்து கேட்டபோது லோடு வண்டி டிரைவர் மற்றும் அவருடன் இருந்த 3 பேர் ஆத்திரத்தில் செல்லமுத்துவை கம்பியால் தலையில் அடித்தனர். இதில் காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் பின்னர் செல்லமுத்து அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து இ.பி. ரோடு, அண்ணாநகரைச் சேர்ந்த ஆறுமுகம் (48) மற்றும் அபினேஷ் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர், அவர்களுடன் இருந்த முத்தமிழ் என்பவரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.