தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் திருச்சியில் விழா; திட்டி தீர்த்த அமைச்சர்!

0 428
Stalin trichy visit

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றி வரும் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் “தமிழகம் 100- தளபதி 100” என்கிற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் தலைமையேற்று விழாவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். இந்நிலையில் கே.என்.நேருவை வரவேற்பதற்காக தி.மு.க. மகளிர் அணி சார்பாக 500 கிலோ எடை கொண்ட மாலையை ராட்சத கிரேன் மூலம் அறிவாலயத்தில் எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பாராட்டு விழாற்கு தலைமை ஏற்க வந்த அமைச்சர் கே.என்.நேருவை மகிழ்விக்க பிரம்மாண்ட மாலையை தயார் செய்து வைத்திருந்ததை கண்டு கோபமடைந்த அமைச்சர் விழா ஏற்பாட்டாலரை திட்டி தீர்த்தார்.

Leave A Reply

Your email address will not be published.