மருத்துவ மாணவி மாயம்

0 273
Stalin trichy visit

திருச்சி பட்டர்வெர்த்ரோடு ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் என்பவரின் மகள் வந்தனா (வயது 21). இவர் நாமக்கல் பல் மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் பயின்று வருகிறார். இந்நிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டிற்கு வந்த அவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில், உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை சந்தோஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து மாயமான மருத்துவ மாணவியை தேடி வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.