கல்லூரி விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கலகல பேச்சு
திருச்சி, மார்ச் 31 இளங்கலை முடித்த பின் கல்யாணமா? இல்லை முதுகலை கல்வியா?.மாட்டிக் கொண்டீர்களடா மந்திரிகளா! மணப்பாறை அருகே அரசு கல்லூரி விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கலகல பேச்சு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 3 ம் ஆண்டு விழா கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கோவி. செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கல்லூரி முதல்வர் மலர்மதி அமைச்சர்களை வரவேற்று பின்பு கல்லூரியில் மாணவர்கள் முதுகலை கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது,
இந்த கல்லூரிக்கு வரும் போது மிகுந்த வரவேற்று அளித்ததார்கள். அதோடு கல்லூரியின் முதல்வர் முதுகலை கல்வி வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். இளங்கலை முடித்து விட்டு என் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று பெற்றோர்கள் மிரட்டுகிறார்கள். அவர்களுக்கு கல்யாணமா? முதுகலை கல்வியா? என்று இருஅமைச்சர்கள் முடிவெடுங்கள் என்பதை போல எங்கள் மீது வீசி இருக்கிறார்கள் கல்லூரி முதல்வர். அவரும் மாணவியாக இருந்து தானே முதல்வராக இருந்திருக்கிறார்கள். அவருக்கு தெரியாததா என்ன? பெற்றோருக்கு அடுத்தபடியாக மதித்து வணங்க கூடியவர்கள் பேராசிரயர்களும், பள்ளி முதல்வர் என்பதை நாம் மறந்து விட முடியாது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் வைத்திருக்கின்ற நெருக்கம் நான் அவர் மீது வைத்திருக்கும் பாசம் இவைகளை கூட்டி கழித்து பார்த்தால் கோரிக்கை விரைவில் நிறைவேறுவது தென்படுகிறது.
இந்த கல்லூரி நிரம்ப பெண்கள் படிக்க கூடிய கல்லூரி என்று சொல்லும் போது சற்று பெறாமையாகதான் இருந்தது. தாயினும் மேலாக போற்றப்படுகின்ற இனம் பெண்ணினம் என்பதை நாம் அறிவோம். என்று பேசிய அமைச்சர் இரண்டு அமைச்சர்களின் அமர வைத்து கல்லூரி முதல்வர் வைத்த கோரிக்கை தான் மாட்டிக்கொண்டீர்களடா மந்திரிகளா என்பதைப்போல உள்ளது என காமெடியாகப்பேசி மாணவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தினார் .
நிகழ்வின் இறுதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ் வழங்கினர். பின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அமைச்சர்கள் மரக்கன்றுகள் நட்டு நீர் ஊற்றினார். விழாவில் திருச்சி மண்டல கல்வி இணை இயக்குனர் முனைவர் பொன். முத்துராமலிங்கம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்ள் திரளாக பங்கேற்றனர்.