செய்தித்தாள் வாசிப்பு முகாம்

0 177
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 31- திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, காவேரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் செய்தித்தாள் வாசிப்பு முகாம் சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் நடைபெற்றது. முகாமிற்கு நகர் நல சங்கத் தலைவர் ஜெயபாலன் தலைமை வகித்தார். இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு செய்தித்தாள் களை வாசித்தனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களின் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக, ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி விக்டர் பொன்னுதுரை உண்டியல்களை வழங்கினார்.
முகாம்பில் சமூக ஆர்வலர் தமிழ்செல்வி இளங்கோ, சுத்தம் சுகாதாரம் உறுதி மொழியை வாசிக்க, அனைத்து மாணவர்களும் ஏற்றுக்கொண்டனர். சங்கச் செயலர் து. செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். நிறைவில், பேராசிரியர் சுமதி தர்மன், மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் அறிமுக யோகா பயிற்சி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.